எங்களைப்பற்றி farm சூப்பர் நேச்சுரல்ஸ் இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்ட சூப்பர் குரூப்ஸ்-ன் கிளை நிறுவனமாகும். எங்கள் விவசாய நிலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 5000 அடி உயரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

இயற்கை வேளாண்மை என்பது வேளாண்மையில் இரசாயன உரங்கள் மற்றும் இரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் அதற்கு ஏற்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது ஆகும்.

இந்த இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக எனப்படுவது பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், கலப்பு உரமிடுதல், உயிரினம் சார்ந்த பூச்சிக்கொல்லி, மண்ணின் உற்பத்தித் திறனை பராமரிப்பதற்காகவும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இயந்திர முறையிலான விவசாயம், செயற்கை உரங்களையும், செயற்கை பூச்சிக் கொல்லிகள், தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகள், கால்நடைத் தீவன சேர்க்கைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்கும் அல்லது மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் ஒரு விவசாய முறைமையாகும்.

முழுமையான இயற்கை வேளாண்மை என்பது - மண்ணை இயற்கையிலேயே வளப்படுத்தி, சரியான பருவத்தில் (நேரத்தில்) விதையை விதைத்து, மண்ணின் ஈரத்தை பாதுகாப்பதன் மூலம் பயிரை வளரச் செய்வது ஆகும்.

எங்கள் நிறுவனம் தமிழ்நாடு விதை சான்றளிப்பு மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு இயற்கை வேளான்மை முறையில் எலுமிச்சை, முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் மலைத்தேன், கொய்யாப்பழம், மலைநெல்லி, காபிகொட்டை, குருமிளகு, இலவம்பஞ்சு முதலியவை விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
English